உலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்திருத்துள்ளது. இது முதலீட்டு நோக்கில் பலரையும் கவர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. பிட்காயின் எனப்படுவது ஒருவகை டிஜிட்டல் நாணயம். இது ஒன்லைனில் உருவாக்கப்பட்டு ஒன்லைனிலே பரிமாற்றப்படுகின்றது. இதனை ஈமெயில் அனுப்புவது போன்று ஒருவர் இன்னொருவருக்கு அனுப்ப முடியும். இதனை விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ள முடியும் மற்றும் இதனை பயன்படுத்தி இணையதளங்களில் பொருட்கள் வாங்க முடியும். இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் ‘பிளாக்செயின்’ என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். அத்துடன் உலகளாவிய பண செலுத்துகை முறையும் ஆகும். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு வாங்க முடியும். நீங்கள் வாங்கும், வைத்திருக்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள wallet இல் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெற்று கொள்ள முடியும்.


Block-Chain


ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் பிட்காயின்கள் அறிமுகமாகி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இது மையமில்லாத டிஜிட்டல் பணம். இதன் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானாலும், அதன் மீதான ஈர்ப்பு  அதிகரித்த வண்ணமே உள்ளது.இதனை ஒரு தரப்பினர்  எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்பினரோ இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் “நீர்க்குமிழி” போன்ற ஒன்று என்கின்றனர்.இணைய உலகிலே தவிர்க்க இயலாத ஒன்றாக உருவாகி இருக்கும் இது  தொடர்பாக நீங்களும் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.பலரும் இது பற்றி அறிந்து கொள்ள ஆவலாகவே உள்ளனர்.இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ,பிட்காயினானது இணைய மிரட்டலுக்கான பணமாக கருதப்படுவது. மற்றையது புதிய தங்கம் என இது சொல்லப்படுவது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம்.இது ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆனால் பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல, இது போலவே நூற்றுக்கணக்கான இணைய நாணயங்கள் இருக்கின்றதாக அறியப்படுகின்றது.


பிட்காயின்


பிட்காயின் வர்த்தகத்தின் நன்மைகள்
1. இதன் மூலம் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்ய முடியும்.இதற்கு விடுமுறைகள் கிடையாது அத்துடன் பணியாளர்களுக்கான தேவை இல்லை.எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும் ஆகும்.

2.கணக்கு வைத்திருப்பவரின் தகவல்கள் மற்றும் அந்த கணக்கு சார்ந்த தகவல்களும் ரகசியமாக encrypt செய்யப்பட்டு பாதுகாக்க கூடியதாக இருக்கும்.

3. இதன் மூலம் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையிலோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் எந்த ஒரு அமைப்பும் இல்லை.இதற்கு நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

4. Online இல் பணபரிமாற்றத்துக்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

6. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்திற்கு credit card, debit card போன்றவை தேவையில்லை.

7. பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான ‘”பிளாக்செயின்” பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதால் பெரும்பாலான மத்திய வங்கிகள் பிட்காயின் மூலமாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.


Bitcoin-Use


Coin Telegraph

அதிகம் விரும்பப்படும் செய்தித் தளங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் காயின் டெலிகிராப் காணப்படுகின்றது. பிட்காயின் மற்றும் அதனுடன் போட்டிபோடும் இணைய நாணயங்கள் தொடர்பான கட்டுரைகள், அலசல்கள், செய்திகள் போன்றவற்றை வழங்க இந்தத் தளம் பயன்படுகின்றது. இங்கு இணைய நாணயங்களின் எதிர்காலம் பற்றிய விவாதமும் முக்கிய அங்கம் வகிக்கிறது சிறப்பம்சமாகும்.


Coin-Telegraph


நாம் எப்போதும் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகின்றதும் அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையிலும் இருப்பவற்றைப் பற்றி கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.இணைய நாணயங்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்பதே உண்மை. எனவே விழிப்புணர்வுடன் செயற்பட்டு நாம் லாபத்தை பெற்றுக்கொள்ள வேண்டியதே முக்கியம். இணைய நாணயமாகிய பிட்காயின் பற்றி உங்களுக்குள் இருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டதா? அப்படியாயின் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து பெட்டியில் பதிவிடுங்கள்..

Leave your comment
Comment
Name
Email