காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா?
இவ் நவீன காலகட்டத்தில் அனைவருக்குமே தமது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற பயம் காணப்படுகிறது. அப்படியானோர் நிச்சயமாக காண்டம் எனப்படும் நாடி ஜோதிடம் பார்த்து தமது எதிர்காலத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். இந்த நவீன உலகில் இது உண்மைதான் என நம்பமறுப்பவர் பலர். ஆதாரபூர்வமாக உண்மை என நிரூபிக்காத பட்ச்சத்தில் யாரும் இதனை நம்ப தயங்குவர் என்பதே நிதர்சனம்.
காண்டம் எனப்படும் நாடி ஜோதிடம் ஒருவரின் பெருவிரல் ரேகைகளை வைத்து அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஓலைசுவடுகளை கண்டுபிடித்து அதிலுள்ள விடயங்களை விளக்கி கூறும் கலையாகும். ஆண்களாயின் வலது பெருவிரல் கைரேகையும் பெண்களாயின் இடது பெருவிரல் கைரேகையும் பெறப்படும்.
இக்கலை, நம் பண்டைய சப்த ரிஷிகளால் வாய்மொழியப்பட்டுப் பின்னர் ஓலையில் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் எழுத்துக்கள் பழந்தமிழ் எழுத்துக்களான வட்டெழுத்துக்களாகும். இச்சுவடிகள் 2000க்கு மேற்பட்ட வருடங்கள் பழமை வாய்ந்தவை. இச்சுவடிகளை சப்தரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்டர், மற்றும் வால்மீகி ஆகியோரே எழுதியவர்களாக கூறப்பட்டிருக்கின்றன, ஆனால் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஒலைகள் கிடைக்கின்றன, வாசிப்புகளும் அவர் பெயரிலேயே இடம்பெறுகிறது.
ஏடுகள் பல காண்டங்களாக அமையும். இதில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் உள்ளடங்கும்
முதலாவது காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்களை கூறுவது..
இரண்டாவது காண்டம் – கல்வி, தனம்,குடும்பம், வாக்கு, நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
மூன்றாவது காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது.
நான்காவது காண்டம் – மனை, நிலங்கள், தாய், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
ஐந்தாவது காண்டம் – பிள்ளைகள் பற்றி கூறுவது.
ஆறாவது காண்டம் – வாழ்க்கையில் ஏற்படும் வியாதி, கடன் , விரோதி, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
ஏழாவது காண்டம் – திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றியும் கூறுவது.
எட்டாவது காண்டம் – உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது.
ஒன்பதாவது காண்டம் -செல்வம், யோகம், தந்தை, குரு பற்றி கூறுவது.
பத்தாவது காண்டம் – தொழில்பற்றி கூறுவது.
பதினோராவது காண்டம் – இலாபங்கள் தொடர்பாக கூறுவது.
பன்னிரண்டாவது காண்டம் – செலவு, மோட்சம், மறு பிறப்பு பற்றி கூறுவது.
சாந்தி காண்டம் – ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
தீட்சை காண்டம் – மந்திரம் ,யந்திரம் போன்றவை பற்றியது
ஔஷத காண்டம் – மருத்துவம் பற்றி கூறுவது.
திசாபுத்தி காண்டம் – வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் கூறுவது.
நாடி ஜோதிடம் எப்படிப் பார்க்கிறார்கள்?
ஜோதிடர்கள் தங்களை நாடி வருபவர்களுடைய பெருவிரல் ரேகையினை ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். (ஒரு மனிதனுடைய பெருவிரல் சுவடு 108 வகையான கோடுகளால் ஆனது. இதன் அடிப்படையில் ஏடுகள் வகைப்படுத்தபட்டிருக்கின்றன). பின்னர் ரேகைக்கான ஓலையைத் தேடுவார்கள். ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு ஜோதிட நிலையத்திலிருந்து தான் தேடி எடுக்க வேண்டும். சுவடி கிடைத்ததும் அது அந்நபருக்குரிய ஓலை தானா என்பதனை அறிவதற்காக வந்திருப்பவரிடம் பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு “ஆம்” அல்லது “இல்லை” என்று பதில் சொன்னால் போதுமானது.
தந்தையின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா?
உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?
மனைவி/ கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா?
உங்களுக்குக் காதல் திருமணமா?
இவ்வாறு அந்த கேள்விகள் அமையும். இவை பொதுவான கேள்விகள் ஆகும். ஓலைக்கு ஓலை கேள்விகள் மாறுபடும். இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான பலன்களைத் கூற முடிவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதற்கு பின் அவர் முன் வாசிக்கப்படுகின்றது. இவையனைத்தும ஒலி நாடாவில் பதியவைத்தும் தரப்படுகின்றது.
எனினும், இப்படிச் சொல்லப்படும் வாக்கு எந்த வகையில் சாத்தியமாகும் என்று விஞ்ஞான ரீதியான அணுகு முறையில் சற்று உற்று நோக்குவோம்.
முக்கியமாக இரண்டு விதமான அணுகுமுறையில் எடுத்துநோக்கலாம்,
1 . ரிஷிகளின் திரிகால, பல் பரிமாண ஞானம்.
2 . ஜோதிடரின் பிறர் உளமறிதல் வல்லமை.
ரிஷிகளின் பல்பரிமாண- திரிகால ஞானம்: நமதுநாளாந்தச்செயல்பாடுகளுக்கு மூளையின் 5% மான பகுதியினையே பாவிக்கின்றோம். ரிஷிகள் 10% க்குச் செல்லக்கூடும். ரிஷிகள் அபூர்வ மூளைக் கலங்களுடையவர்களாக பிறந்து, ஒருங்கிணைந்த தியானம் மூலம் ஓர் உயரிய அறிவுடை நிலையை அடையப் பெற்றனர். இம்மாகா சக்தியானது அவர்களுக்கு அளப்பரிய பேராற்றலைக்கொடுத்தது. சாதாரணமான புலன்களுக்கு நீளம், அகலம், உயரம், நேரம் என்ற நான்கு பரிமாணங்கள் மட்டுமே புலப்படும். ஆனால், ரிஷிகள் பல பரிமாணங்களை காணக் கூடிய ஆற்றலை அடைந்தனர். அவற்றை அவர்கள் உணர்ந்ததனால், இந்த மேலதிக உணர்வின்படி அவர்கள் எல்லோரது முற்காலம், தற்காலம், பிற்காலம் எல்லாம் இலகுவில் கணப்பொழுதில் போய் வந்தனர். இப்படி அவர்கள் எழுதியதே நாடி ஜோதிடம் ஆகியது என்று கருதுகின்றனர்.
பிறர்உளமறிதல்: சொல்பவர்கேட்பவரிடமிருந்தே தகவல்களை உணர்ந்து, அவருக்கே திருப்பி ஒப்படைக்கிறார் என்று கொள்ளலாம். மற்றவர்களை உற்றுநோக்கியோ, அவர்களுடன் பேசியோ அவர்கள் கூறியோ, கூறாமலேயோ அவர்களின் மனதுள் இருக்கும் எண்ண ஓட்டங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள கூடியவர்களாய் இருப்பர் (Mind reading, Telepathy) மேலும், அவர்கள் கூற நினைப்பதை வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச்சொல்லாமல் குழப்பி விடுவார்கள். உதாரணமாக, உங்கள் மரணம் பற்றிக் கேட்டால், “அறுபதோடைந்து ஓடுடை ஜந்தின் முடகு கால் விடுத்து வளமுடைவிரல்களின் கூட்டும்குணமுடன் சேர கடுபுலன் முடிவில் சரண்தனில் மோசம்“. முடியுமான அர்த்தத்தை எடுத்தக் கொள்ளுங்கள். பல இலக்கங்கள் உள்ளன. கூட்டியோ கழித்தோ விடையை எடுத்துக்கொள்ளலாம்.
மனித வாழ்க்கை குறித்த ஒரு கோலத்தினடிப்படையில் நிகழ்வதாகக்கொண்டு, அதனை முன்கூட்டியே உய்த்தறியலாம் என இக்கலைக்கு சார்பாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. என்னதான் பொருத்தி பார்த்தாலும் ஒருவருடைய பிறந்த தேதி, அவர்களுடைய மூதாதையர்கள் பெயர், உறவினர்கள் பெயர்கள், மகன்களின் பெயர்கள், வயது மற்றும் முழுப்பெயர்கள், போன்ற தகவல்களை எப்படி சரியாக கூறமுடியும் ??
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா ? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் .
keep it going nive..useful to all..congratz..
Thank you sandu
Useful article for all..keep writing nive
Thank you Bagya.. keep reading
Superb sister. I wannt talk to you more regarding this. I will meet you
Thank you Banujan
ரொம்ப நல்ல பதிவு
Thank you sano..
useful article….keep writing…
waiting for ur next article…
Thx u . I will give best articles for you
It’s simply superb…
I wanna deep information about this…
Regarding with some real stories,person who are able to do this likewise…
Keep going
Best of luck
Thank you Niroshan.. everyone search deeply about this
Use full article for everyone…
Thank you Hetha..
Great job nive. Keep it up
Thank you iroshini
Interesting to read.now I m very anxious about my future fortune.
Ya all youngsters like you Paviththiran
இது போன்ற விஷயங்களை நான் நம்புவதில்லை.வரும் காலங்களில் நடக்க இருப்பது தெரிந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. உனது முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Thank you for your comment
Interesting article.. Keep going dr
Thank you Nithi.. keep reading
Super article. I expect more good articles more than this. Keep it up.
Thank you jasikaran..I will give more.. keep reading
Good article….keep it up
ThAnkyou varman
இவ் நவீன காலகட்டத்தில் அனைவருக்குமே தமது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற பயம் காணப்படுகிறது. அப்படியானோர் நிச்சயமாக காண்டம் எனப்படும் நாடி ஜோதிடம் பார்த்து தமது எதிர்காலத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்
True vithiya
காண்டம் என்பது உண்மை தான் ஆனால் உண்மையான எம்முடைய காண்டங்கள் எல்லாம் இருப்பது சிதம்பரத்தில். எனவே தான் இங்கு வ்சிக்கப்படும் காண்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை
ThAnkyou for your comment
அருமை …ஆசம்…..அற்புதம் என்ன சொல்ல…. வளர்க உன் பணி
ThAnkyou jathu
சிறந்த பதிவு. தொடரட்டும் உன் தேடல்.
ThAnkyou Nirosh
Worth Reading
ThAnkyou
இந்த காலத்தில் ஜோதிடம் பார்ப்பது என்பது குறைந்து வருகிறது… எம் முன்னோர்கள் எனது வாழ்க்கையை சரியாக கணித்துள்ளனர்… சிறப்பான கட்டுரை.. வாழ்த்துக்கள்
Thank you mauran
best article ever..cngratz …write more like this ..
ThAnkyou Shan.. keep reading
Wow intresting and it gave me some new knowledge about the astrology keep writing dear
ThAnkyou dayani
Super article Nive.. best wishes
ThAnkyou Rucksala
Super sis
ThAnkyou gopi
Nice . and usefull. It is new information for hope u to write more and more Akka.
ThAnkyou Laveena keep reading
Nice article nive. If you add some more details regarding this it will be more useful for readers. Like if you can let them knw the contact details of them if is it available. The location where ever you find. Keep going.
ThAnkyou arthy
காண்டம் பற்றி மேலும் எதிர்பார்த்திருந்தேன். நன்று வளர இடமுண்டு வாழ்த்துக்கள்
ThAnkyou for your comment
It is very interesting article. Nadi astrology is a amazing but we can’t believe that every astrologer is true.
ThAnkyou for your comment kavitha
Nice akka ….keep it up
ThAnkyou
மிகவும் அருமையான மற்றும் தரமான பதிவு. கொழும்பில் காண்டம் பார்க்கும் இடத்தின் முகவரி தரமுடியுமா சகி???