Iphone பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இதோ!!!

இன்று எத்தனையோ மொபைல்கள் சந்தையை ஆக்கிரமித்து இருந்தாலும் ஆப்பிளின் iphone மோகம் மட்டும் சிறிதும் குறைந்தபாடில்லை. குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியிலான நற்மதிப்பை பெற்றுள்ள அப்பிள் நிறுவனமானது. அண்மைக் காலங்களில் பாரியதொரு வளர்ச்சியை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் iphone க்கு ரசிகர்கள் மிக மிக அதிகம், அதிலும் பலர்  அடுத்த வெர்ஷனுக்கு தவம் கிடக்கிறார்கள். Smart Phone வரலாற்றில் “என் வழி தனி வழி” என்ற சொல்லிற்கேற்ப என்றுமே தனித்திருந்து சாதனை புரிந்து வரும் நிறுவனங்களில் அப்பிளுக்கு நிகர் அப்பிளே! அந்த வகையில் அப்பிளின் தயாரிப்பில் iphone களுக்கு என்றுமே ஒரு மகத்துவமான இடம் உண்டு. தரமான தயாரிப்பு, நீண்டகால பாவனை மற்றும் விலைக்கேற்ற தரம் போன்ற விசேட அம்சங்களை வழங்கி அனைத்து தரப்பினரின் மனதையும் வெளிப்படையாகவே கொள்ளை அடித்துள்ளது.


iphone


Iphone  மின்கலத்தின் பாவனை

phone 6s மின்கலத்தின் பாவனை ஆனது 14 மணி நேரம் கதைக்கும் நேரத்தையும் 11 மணி நேரம் HD காணொளிகளைப் பார்வையிடும் வகையிலும் 10 மணி நேரம் LTE இணையப் பாவனை பயன்படுத்தும் வரையும் நிலைத்திருக்கும் ,smart  மின்கல உறையின் ஊடாக iphone இன் மின்கல ஆயுள் , 25 மணி நேரம் கதைக்கும் நேரத்தையும் 20 மணி நேரம் HD காணொளிகளை பார்வையிட முடியும் எனபதுடன் 18 மணி நேரம் LTE இணையப் பாவனையை மேற்கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 80 % மின்கலத்தின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது. இதனை விட 7, 7 plus, 8, 8 Plus என்பன மிக அதிகளவில் மின்னை சேமிக்கக்கூடிய மின்கலன்களை கொண்டுள்ளது ஏனைய phone நிறுவனங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.


iphone-battery


அத்துடன் iphone மின்கலத்துடன் போட்டி போடுவதற்கு சந்தையில் மூன்றாம் நிலை உற்பத்தி மின்கல நீடிப்பு உறைகள் இருக்கின்ற பொழுதிலும் மின்கல நீடிப்பு உறைகள் வேறுபடுத்தப்பட்டு முன்னிலை பெறுவதற்கான உற்பத்திகளை அப்பிள் கொண்டுள்ளது. அதன் முலம், அப்பிளின் மின்கல நீடிப்பு உறையினைக் வைத்து இருப்பவர்கள் அவர்களின் phone முகப்புத் திரையில் மின்கல நீடிப்பு உறையானது எவ்வளவு % மின்னைக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதுடன், 3ஆம் நிலை மின்கல உறைகள் போன்று, மின்கலத்தை மின்னேற்றுவதற்கு தனியான வயரைக் கொண்டிருக்காமல், iphone ஐ மின்னேற்றும் அதே வழியினாலேயே மின்னேற்ற முடியும்.


charge


எதிர்கால தயாரிப்பு

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனர் ஸடீவ் ஜாப்ஸ் computer களில் பயன்படுத்தும் mouse சாதனத்தை அதிகம் பிரபலபடுத்தினார், மேலும் phone களில் இருக்கும் 3D touch தொழில்நுட்பம் உலகம் என்கும் அதிக எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இப்போது உருவாக்கிவரும் display, iphone X மாடலின் OLED ஸ்கிரீன் கீழ்புறமாக வளைந்திருந்தாலும், கண்ணுக்கு தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது விசேடமாக உள்ளது.. பொதுவாக LCD display களை விட OLED  ரக Display களை எளிதில் வளைக்கவோ, மடிக்கவோ முடியும், ஆனால் வளையும் தன்மை கொண்ட phone களை வெளியிட 3 ஆண்டுகள் வரையாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


bend-iphone


ஆப்பிள் நிறுவனம்,  phone ஐ தொடாமலேயே அவற்றை இயக்க வழி செய்யயும் வகையில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இனிவரும் phone கள் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் உடன் வளைந்த கண்ணாடி திரைகளை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் உலகம் எங்கும் இது அதிக வரவேற்பை பெற வாய்ப்புள்ளது ஆனால் விலை தான் சற்று அதிகமாக இருக்கும். குறிப்பாக பல்வேறு அம்சங்கள் எதிர்கால phone களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை எதிர்கால phone க்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


touchless


எத்தனை நிறுவனங்கள் புதிது புதிதாக phone ஐ உற்பத்தி செய்தாலும் ஆப்பிள் இன் உற்பத்திக்கு  நிகராகாது என்பதே நிதர்சனம். அத்துடன் apple இன் உற்பத்தியான iphone ஐ பயன்படுத்துவதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தில் இருக்கும் தோற்றமும் சுயமாகவே ஏற்படுகின்றது. எனது கருத்துக்கள் உங்களின் apple phone பற்றிய அபிப்பிராயத்தை மாற்றி apple இன் உற்பத்திக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது  அல்லவா? அப்படியாயின் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்துப்பெட்டியில் பதிவிடுக..

Leave a Reply

%d bloggers like this: