இலங்கை பற்றி பலரும் அறியாத 8 விசித்திர உண்மைகள்!! 

ஏறக்குறைய இரண்டு கோடியே பதினைந்து லட்சம் மக்கள் வாழும்  இலங்கை ஒரு கண்கவர் நாடாகும்.இது தெற்காசியாவை சேர்ந்த ஒரு தீவு நாடு. மதம், இனம், மொழி, கலாச்சாரம் என்பவற்றில் பன்முக தன்மை கொண்ட இது  மழைக்காடுகள், மேகங்கள் சூழ்ந்த மலைத்தொடர்கள், அழகிய கடற்கரைகள் நிறைந்த செழிப்பான ஒரு நாடாகும். புதிரான வரலாறு, மலிவான ஆடம்பரம்,ருசியான உணவுகள் உள்ளிட்டவைக்கு பெயர் போன இலங்கை மூன்று தசாப்பத காலம் உள்நாட்டு யுத்தம், இயற்கை பேரிடல்கள் என சோதனைகளை சந்தித்த போதும் அனைத்தையும் சமாளித்து தெற்காசிய நாடுகளில் குறிப்பிடதக்க ஒரு வளரும் நாடாக உள்ளது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இலங்கையின் பலரும் அறிந்திடாத 8 உண்மைகளை பார்ப்போம்.

1. இந்து சமுத்திரத்தின் முத்து

இயற்கை எழில்களும் பல்லுயிர்களும் நிரம்ப பெற்றுள்ளதாலும் விலை உயர்ந்த நவரத்ன கற்கள் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றாக இருப்பதனாலும் இந்த நாடானது இந்து சமுத்திரத்தின் முத்து எனவும் மற்றும் கண்ணீர் துளியை ஒத்த நிலப்பரப்பு வடிவுடன்  இந்தியாவை ஒட்டி அமைந்துள்ளதால் இந்தியாவின் கண்ணீர் துளி என்றும் அழைக்கப்படுகின்றது.


Gem-Stones

2. ராமர் பாலம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார்   தீவுகளுக்கும் இடையில் உள்ள கடலில் சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் ஆதாமின் பாலம் எனவும் ராமர் பாலம் எனவும் அழைக்கப்படுகின்றது.சுமார் முப்பது Km நீளம் கொண்ட இந்த பாலம் அமைந்த கடற்பகுதியின் ஆழம் மூன்று முதல் முப்பது அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலாகவும் உள்ளன. ராமாயணத்தில் ராமர் கடலை கடந்து சீதையை ராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் கல் கொண்டு கட்டிய பாலம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த பாலம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.


Adams-Bridge

3. சிவனொளிபாதமலை

பௌத்தர்களால் ஸ்ரீபாத எனவும் இந்துக்களால் சிவனொளிபாதமலை எனவும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் ஆதாமின் மலை எனவும் அழைக்கப்படும் 7359 அடி உயரம் கொண்ட கூம்பு வடிவ மலை ஒன்று இலங்கையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பும் சமய சிறப்பும் வாய்ந்த இம் மலையின் உச்சியில் 5 அடி 11 அங்குலம் கொண்ட ஒரு மனிதனின் காலடி தடம் உள்ளது. இது புத்தரின்கால்தடம் என பௌத்தர்களாலும் முதல் மனிதனான ஆதமின் காலடி என இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களாலும் சிவனின் பாதம் என இந்துக்களாலும் நம்பப்படுகின்றது. எனவே இலங்கையில் வாழும் அணைத்து சமயத்தவர்களுக்கும் இம் மலை புனிதமான ஒரு இடமாக உள்ளது. இறைவன் மனிதனை படைத்தது இங்கு தான் என அவர்கள் நம்புகின்றனர்.


Sripada

4. தேயிலை உற்பத்தி

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றது தேயிலை. இந்நாடு தேயிலை உற்பத்தி யில் உலகளவில் நான்காவது இடம் வகிக்கின்றது.உலகின் பிரபல லிப்டன் தேயிலை இங்கு உற்பத்தி ஆகும் தேயிலையை கொண்டே தயாரிக்கப்படுகின்றது.இங்கு உற்பத்தி ஆகும் தேயிலைகள் நேரடியாக வெளிநாட்டு லிப்டன் தேயிலை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.


இலங்கை

5. சிகிரியா மலைக்கோட்டை

தம்புள்ள நகரில் வரலாற்று சிறப்பு மிக்க சிகிரியா மலைக்கோட்டை அமைந்துள்ளது.உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. 660 அடி உயரம் கொண்ட இது பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் உள்ளது.


Sigiriya

6. இலவங்க பட்டை

இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் உணவு மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலவங்க பட்டை இலங்கையை  பூர்விகமாக கொண்டுள்ளது.உலகளவில் சுமார் 33% அளவிலான இலவங்க பட்டை ஏற்றுமதி இங்கிருந்தே செய்யப்படுகின்றது.


Cinnamon-In-Sri-Lanka

7. சுகாதார இலங்கை

கடந்த 2016 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இலங்கையை மலேரியா நோய் முற்றிலும் ஒழிக்கப்படட நாடுகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மலேரியா நோயால் பாதிக்கப்படட பெரும்பாலான நாடுகளில் இதுவும் ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் மலேரியா நோய் ஒழிப்பிற்கான அரசாங்கத்தின் தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த நாட்டில் இவ் நோய் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டுள்ளது.


Mosquito-Malaria

8. ஸ்ரீ மகாபோதி மரம்

மனிதனால் நடப்படட மிக பழமையான மரமாக அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபோதி  மரம் கருதப்படுகின்றது.இந்த மரமானது நடப்பட்டு சுமார் 2000 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் இந்தியாவில் இருந்து புத்தர் ஜானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளை கொண்டு வரப்பட்டு நடப்பட்டது எனவும் நம்பப்படுகின்றது.


 Srimahabodhi


இந்த சிறிய நாட்டில் காணப்படும் நீங்கள் அறியாத சில உண்மைகளை நான் இங்கு பகிர்ந்துள்ளேன். இலங்கை பற்றிய வேறு தகவல்கள் நீங்கள் அறிந்திருப்பின் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்துப்பெட்டியில் பதிவிடுக.

Leave your comment
Comment
Name
Email