இணையத்தளத்தில் பாதுகாப்பாக உலாவ சில வழிகள்

இணையத்தில் வலம் வரும் போது ஏற்படும் சிறு கவனக்குறைவு கணணியைப் பாதிக்கும் தவறான விடயங்களாலும் பிரத்தியேக தரவுகள் திருடப்படவும் சில வேளைகளில் பணத்திற்கான கோரிக்கை விடவும் மேலதிகமாக நாம் அறியாமலே அவை திருடப்படவும் வழிவகை செய்கிறது. அண்மைக்கால அறிக்கைகளின் படி ஒவ்வொரு வருடமும் 125,000 சட்ட விரோத வலைத்தளங்கள் கண்டறியப்படுவதாகவும் கடந்த 3 வருடங்களில் இனைய தள  மோசடிகளால் 2.3 பில்லியன்  அமெரிக்க டொலர் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவு நிருவனங்களால் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.  அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட  இன் நிலையை கட்டுப் படுத்த முடியாதுல நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் இவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும் பாதுகாப்பான நடைமுறைகளை கையாள்வதன் மூலம் இவற்றைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.


internet-browser

பாதுகாப்பான இணைய உலாவியை  (Internet Browser)  பயன்படுத்துங்கள்.

அநேக இணைய உலாவிகள் தீம்பொருள் (Malware) மற்றும் Phishing இற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன. பாதுகாப்பான இனைய உலாவியாக Microsoft Edge 99% தீங்கிழைக்கும் மாதிரிகளை கண்டறிவதாகவும் ஒப்பீட்டளவில் Google Chrome 85.9% யும் Mozilla Firefox 78.1% ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. Microsoft Edge ஆனது Smart Screen URL மற்றும் Application Filtering தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் URL பதிவிறக்கம் செய்வதற்கு முன்பே அதனை சரிபார்த்து வடிகட்டுகின்றது.

இணைய பாதுகாப்பு அம்சங்களை நாமாகவே வடிவைமத்துக் கொள்ளல்.

இணைய உலாவியில் இணைய பாதுகாப்பு அம்சங்களை நாமே வடிவமைத்துக் கொள்ளும் வசதிகள் விசேட தேர்வுகள் (Advance Options)  பகுதியில் உள்ளன. உதாரணமாக “autoFill” அம்சமானது வலைத்தலங்களில் பயனர்பெயர் மற்றும் கடவுச் சொல்லினை சேமித்து வைத்து தன்னியக்கமாக நிரப்பும் வசதியைத் தருகிறது இதனை முடக்கி வைப்பதன் மூலம் பாதுகாப்பு தன்மை பேணப்படும். தட்டச்சு சுமையைக் குறைக்க பயன்படுத்துபவராயின் தனி நபர் கணணியின் பாதுகாப்பு தன்மையை பான் மடங்கு உறுதி செய்துகொள்ளவேண்டும். தொல்லைதரும் விளம்பரங்களில் இருந்து விடுபட “block pop-up windows” அம்சத்தை தெரிவி செய்திருத்தல் வேண்டும். மேலும் “Turn Off Cookies” அம்சமானது தனியுரிமை பாதுகாப்பினை மேலும் அதிகரிக்கும்.


browser-cookies

தனித்துவமான கடவுச்சொல்லினைப் பயன்படுத்தல்.

இணையதளத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று கடவுச்சொல்லின் பாதுகாப்பின் அளவு ஆகும். இணையத்தால் பரிந்த்துரைக்கப்படும் கடவுச் சொல்லின் அளவானது 16 எழுத்துக்களாகும் இருபினும் குறைந்த பட்சம் 8 எழுத்துக்களையாவது கொண்டிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது. கடவுச் சொல் உருவாக்கத்தில் ஒத்த எழுத்துக்களை பயன்படுத்துவது பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கும். உதாரணமாக  a – @, B – 8, i – !, 0  – o, 1 – l போன்றவை. மேலும் இவ்வாறான கடவுச்சொல் பயன்பாடுகளை நெறியாள்கை செய்ய “Password Managers” ஐப் பயன்படுத்தலாம்.  இவை “autoFill” செயன் முறையை பாதுகாப்பாக செய்வதுடன் முன்பு பயன்படுத்திய அதே கடவுச்சொல்லை  வேறு இடங்களில் மீண்டும் பயன்படுத்தும் போது எச்சரிக்கும் மேலும் இவை மடிக்கணணி, தொலைபேசி, போன்ற சாதனங்களுடன் ஒத்திசைந்து இயங்குவதால் மீண்டும் மீண்டும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யாதிருக்கும் வசதியையும் தருகிறது. இவற்றிக்கு சில உதாரணமாக KeePass, LastPass போன்றன இலவசமாக இச் சேவையை வழங்குகின்றன.

Phising மின்னஞ்சல்கள்  மீது அவதானமாயிருத்தல்.

நமை நன்கறிந்த ஒருவரிடமிருந்து வருவது போல இம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டாலும் இவை அடையாளத்திருட்டு, கடன் அட்டை மோசடி போன்றவற்றிற்கு வழிவகைக்கும் வழிகளாக இவை அமைந்து விடுகின்றன. 90 வீதமானவை ransomware ஆக கருதப்படுகின்றன. இவை தனிப்பட்ட கோப்புக்களை திருடி கப்பம் கோரும் வகையானவை. Diligent அறிக்கைகளின் படி நாளொன்றிக்கு 156 மில்லியன் Phising மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும் அவற்றில் 16 மில்லியன் Spam வடிகட்டிகள் மூலம் கண்டறியப்படாமலும் போவதாக கூறப்படுகிறது. இவை,


password-managers
  • இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் கொண்டவையாக இருக்கும்.
  • உங்கள் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்படுவதில்லை.
  • தனிப்பட்ட தகவல்கலைக் கோருவதாக இருக்கும்.
  • அவசரமாக செயற்படுத்துமாறு கோருவதாக இருக்கும்.
  • பணம் அல்லது நன்கொடை கேட்கும்.
  • URL சரியானதாக இருக்காது.

போன்றவை இதனைக் கண்டறிய சில வழிகளாகும்.

மேலும் பாதகாப்பு வசதிகளை உறுதி செய்துகொள்வதற்கு,  பொருத்தமான Anti-Virus Protection ஐப் பயன்படுத்துங்கள். தெரிவுகளை மேற்கொள்ளும் போது Total Security வசதியைக் கொண்டதாக தெரிவு செய்யும் போது Smart Phone இற்கும் பாதுகாப்பு வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். 32 சதவீதமானவர்கள் மட்டுமே Anti – Virus Protection ஐப் பயன்படுத்துவதாகவும் அதில் 28 சதவீதமானவர்கள் மட்டுமே Smart Phone வசதியைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைப்படுத்தப்பட்ட்டுள்ளது. நாளுக்கு நாள் இணையம் சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் சரியான பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்வது அவசியமாகும்.

Leave your comment
Comment
Name
Email