தலைமுடி பராமரிப்புக்கான இலகுவான வழிகள்

இன்று காலையில் மோட்டார் வண்டியொன்றை பெண்ணொருவர் மிக லாவகமாக ஒட்டி சென்றதை காண முடிந்தது. காற்றில் தலைமுடி பறந்து சென்ற விதமே எனை,  என்ன ஒரு வேகம் என ஆச்சரியப்படுத்திவிட்டது.  முச்சந்தியோன்றில் வேகம் குறைந்ததும் யார் என காண முன்னே சென்று பார்த்தால் மீசை, தாடியுடன் ஒருவரைக் கண்டதும் எல்லாம் பொய்யாகி போனது…. இன்றைய கால கட்டத்தில் ஆண் பெண் என இரு பாலரும் தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது. இருந்தும் சரியான பராமரிப்பு வழிகளை பலரும் பின்பற்றுவதில்லை. இதனால் அதிகளவு தலைமுடி உதிர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனைத் தவிர்க்க சில வழிகள்.


Hair Care

எப்போதும் தலைமுடியை சுத்தமாக வைத்திருங்கள். தலைக்குக் குளித்ததும் தலைமுடி சீக்கிரமே உடைந்து போகும் நிலையில் மிக பலவீனமாக இருக்கும் எனவே மென்மையான துவாயால் கூந்தலை மிருதுவாக சுற்றித்துடைக்க வேண்டும். கூந்தலை ஒருபோதும் இறுக்கமாக கட்டிக் கொள்ளாதீர்கள். அது கூந்தலின் வேர்களை பலமிழக்கச் செய்து உதிர்வடைவதர்க்கு காரணமாகிவிடும். கூடிய வரையில் தலைமுடி உலர்த்த ஹேர் டிரையர் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

தலைமுடிக்ககாக சீப்பை பயன் படுத்தும் போது,

தினமும் 2 முறைகள் தலைமுடியை வாரி விடுங்கள். அது தலைப் பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டி விடும். தவிர அது தலைப் பகுதியில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும். மேலும் அழுக்கான சீப்பு மற்றும் பிரஷை உபயோகிக்க கூடாது. வாரம் ஒருமுறை உங்கள் சீப்பு மற்றும் பிரஷை சவர்க்காரம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உபயோகியுங்கள். எப்போதும் கடினமான பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கொண்ட பிரஷ் உபயோகிக்காதீர்கள் அத்துடன் பிரஷில் ஒரு பல் உடைந்தால் கூட அதை உடனே மாற்றுங்கள். சரியான பற்கள் கொண்ட பிரஷை பயன்படுத்துவது என்பது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும் Back Combing எனப்படுகின்ற தலை கீழ் வாருதலைத் தவிருங்கள். அது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.


Hair Fall

தலைமுடி பிரச்னைக்கு கை கொடுக்கும் இஞ்சி

வீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான Anti Oxidents இருக்கின்றன. அதனை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம். குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பொடுகை அழிக்கவும் பயன்படுகிறது. ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இஞ்சியை தலைமுடிக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இஞ்சியை இலேசாக நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள் பின்னர் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடி வேர்களில் படிப்படியாக நன்றாக தோய்த்துக் கொள்ளுங்கள். அரை மணிநேரம் கழித்து தலைக் குளிக்கலாம். இது முடியில் வறட்சியை தடுத்து தலைமுடி உதிர்வை தடுக்கும்.சின்ன வெங்காயத்தை இலேசாக வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொண்டு இதன் பாதியளவு இஞ்சி சாறு கொண்டு அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஒருநாள் முழுக்க அப்படியே வைத்திருந்தால் தெளிந்த எண்ணெய் மேலே வந்துவிடும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதனை பயன்படுத்தலாம்.


Hair Washing

இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இஞ்சியை அரைத்து வாரம் ஒருமுறை தலையில் Hair Patch ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக் குளித்து விடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுதை 3 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணையில் ஊற வைத்து பின்னர் அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள் பின்னர் இளஞ் சூடான நீரில் கழுவி விடலாம் ஏதேனும் எரிச்சல் இருந்தால் உடனடியாக கழுவி விடுங்கள். சிலருக்கு இஞ்சி எரிச்சலை கொடுக்கும்.

இஞ்சி தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு பாதியளவு இஞ்சி சாறு எடுத்துக் கொண்டு தலையில் தோய்த்து மைல்ட் ஷாம்பூ போட்டு தலைக்குளிக்கலாம். 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையுடன் கலந்து கொண்டு ½ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் மசாஜ் போல போட்டு கொள்ளுங்கள். வாரம் இருமுறையாவது தலையை மசாஜ் செய்யுங்கள்.


Hair-Cutting

இவ்வாறாக இலகுவானதும்  இயற்கையானதுமான வழிமுறைகளால் முடியைப் பராமரிக்க முடியும். இது பக்க விளைவுகளற்றதாகவும் இருப்பது சிறப்பம்சமாகும்.  கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் முடியை இழந்த பின் கவலைப்படாமல் இன்றிலிருந்தாவது தலைமுடியை ஒழுங்காக பராமரியுங்கள்.

Leave your comment
Comment
Name
Email