Cloud Computing வணிகத்திற்கு வழங்கும் சிறந்த 10 நன்மைகள்!!!

Cloud Computing ஆனது வணிகத்தின் நடைமுறைகளைப் பெருமளவில் மாற்றியமைத்து  அளவிடமுடியாத தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக 2015 இல் 67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த Cloud Computing சந்தையானது 2020 களில் 162 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் உள்ளூர் கணணி அல்லது உள்ளூர் சர்வரில் (Server) இயக்க வேண்டும், ஆனால் இப்பொழுது Cloud Computing மூலம் உலகின் எந்த இடத்திலும் இணையத்தினூடு அதே பயன்பாடுகளை அணுக முடியும். பல தொழில்களில் இத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட காரணமான நன்மைகள் கீழே பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.


Cloud Computing

1. தன்னியக்கமான மென்பொருள் மேம்படுத்தல்கள்

Cloud ஆனது முன்கூட்டியே வரையறுக்கப்பட்டதாகும் எனவே ஒரு நிறுவனமானது அதிலிருந்து சேவைகளைப் பெறுவது மட்டுமே போதுமானதாகும். ஒரு மென்பொருளானது மேம்படுத்தப்படும் அவசியம் ஏற்படும் போது அது மென்பொருள் வளங்குனர்காளால் தன்னியக்கமாக மேம்படுத்தப்படும். எனவே நிறுவனமானது புதிப்பிப்பதற்கான செலவுகள் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

 

2. அதீத நெகிழ்வுத்தன்மை

இலாப நட்டங்களில் எற்ற இறக்கங்களுடன் கூடிய நிறுவனங்கள் மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் நிருவனங்களுக்கும் இது ஏற்றது. நிறுவனமானது தமது நடவடிக்கைகளை கண்காணித்து அளவிட ஏற்ற சூழலை வழங்குவதன் மூலம் மேலதிக வேலைகளை இலகுவாக்குகிறது.

 

3. அதிகரித்த கூட்டு இயங்கும்தன்மை

நிறுவனத்தின் பயனர்கள் பயன்படுத்தும் வளங்கள் வெவ்வேறு இடங்களில் பிரிக்கப்பட்டிருப்பினும் அனைவரும் Cloud இன் பணிபாய்வுக் குழுவின் உதவியுடன் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையை வழங்குகிறது. குழுவின் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்துதலை குழுவிலுள்ள அணைவராலும் அறிந்து கொள்ளும் வகையில் செய்ய முடியுமானதகவும் இருக்கும்.

 

4. எங்கிருந்தும் அணுகுவதற்கான திறன்

நிறுவனத்தின் கிளைகள் அல்லது நிறுவனத்தின் பணியாளர்கள் உலகின் வெவ்வேறு இடங்களில் இருப்பினும் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே திட்டத்தினை செயற்படுத்தவும் ஒரே கோப்புகள் மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்வதற்குமான பயன்பாடுகளை வழங்க உதவுகிறது. இதன் மூலம் உற்பத்தி திறனானனது பயன்படுத்தும் வளங்களில் தங்கியிருக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது.

 

5. மேம்படுத்தப்பட்ட தரவு பாதுகாப்பு

தகவல்கள் சேகரிக்கபட்டுள்ள சாதனங்கள் தொலைக்கப்படும் போது இழந்த தரவுகள் அனைத்தையும் மீண்டும் திரட்டுவது என்பது சிக்கலான செயலாகும். தற்செயலாக கணனியில் சேமிக்கப்பட்ட தரவுகள் நிரம்தரமாக அளிக்கப்படும் போதோ அல்லது சாதனமானது செயலிழக்கும் சந்தற்பத்திலோ அதனை மீள திரட்டுவது என்பது சாத்தியமற்றதாகும். Cloud Computing இனால் தரவுகள் அனைத்தும் Cloud இல் சேமிக்கப்படுவதால் சாதனத்தில் ஏற்ப்படும் இழப்பானது தரவுகளைப் பாதிக்காது. மேலும் சிறந்த பாதுகாப்பினை வழங்கக் கூடியதாக இருக்கும்.

 

6. தனித்துவமான  தகுதி

Cloud ஆனது மிகவும் சிறந்த தரமான தொழில் நுட்பங்களை அணுகுவதற்கான வாய்ப்பளிக்கிறது. இதனால் சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் தன்மையை வழங்குகிறது. சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் விரைவாக போட்டியிடும் சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறது.

 

7. செலவுச் சிக்கனத்தன்மை

ஒரு நிறுவனத்தின் வன்பொருள் கொள்வனவிற்கான மூலதனச் செலவானது கணிசமான அளவில் குறைக்கப்படும்.வியக்கதகும் வகையில் 5 மடங்கு வரை செலவு குறைக்கப்படுகிறது. மேலும் இங்கு கட்டணம் செலுத்தும் போது பயன்படுத்தும் கால அளவை மட்டும் கருத்தில் கொண்டு கட்டணம் அறவிடப்படுவதால் சந்தா போன்று செலவினைக் குறைக்க வழி செய்கிறது.

 

8. பேரழிவு மீட்புத் திட்டங்கள்

Cloud சேவைகள் தமது வாடிக்கையாளரின் நலன் கருதி மிகச்சிறப்பான Backup வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளன. இவை சேவைகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மீள தொடங்குவதற்கு உதவுகிறது. எனவே அவசர நிலைமைகளில் பேரளிவுகளுக்குட்படாமல் சிறந்த மீட்பு திட்டங்களை வழங்குகிறது.

 

9. சிறப்பான ஆவணக் கட்டுப்பாடு

பல்வேறு பணியாளர்களும் தமக்கென தனியான கோப்புகளைப் பேணும் போது அதன் உள்ளடக்கம் பற்றி முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும். Cloud இல் குறித்த ஒரு ஆவணத்தை மட்டும் மையமாக பேணும் போது குறித்த அந்த ஆவணத்தில் ஏற்படும் மாற்றமானது அனைவாரளும் கண்டறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

 

10. இலகுவாக சமாளிக்கும் ஆற்றல்

இலகுவான தகவல் மேலாண்மை மற்றும் பராமரிப்பினை Cloud வழங்குகிறது. தகவல் உட்கட்டமைப்பிற்கு எந்த மேலதிக செலவும் இல்லாமலே புதுப்பிக்கப்படும். எனவே சேவை வழங்குனரால் எல்லாம் நிர்வகிக்கப்படுவதால் அதக பராமரிப்பு தேவையில்லை. எனவே நிலையான உத்தரவாதம், தகவல் தொழில் நுட்ப பராமரிப்பு என்பவற்றை உறுதி செய்ய முயுமானதாக உள்ளது.

மேலும் சுற்றுச் சூழல் நல்லிணக்கம், ஒருங்கிணையும் தன்மை என இதன் பயன்பாடுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால் தொழிலினை திறமையான முறையில் நிர்வகிக்க முடிகிறது. சமீபத்தைய போக்குகளின் அடிப்படியில் Cloud Computing ஆனது எதிர்காலத்தில் விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தும் என்பதற்கான சான்றுகளாக,

  • Tech C.E.O களின் 74% Cloud Computing 2017 இல் தொழில்களில் மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கணிக்கப்படுகிறது.
  • அமெரிக்காவின் சிறு தொழில்களில் 37% முழுமையாக Cloud இற்கு மாற்றப்பட்டுள்ளது. இது 2020 களில் 80% ஐ எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2018 களில் 246.8 பில்லியன் டாலர்கள் அளவிலான வருவாயினை Cloud சேவைகள் ஈட்டியுள்ளன. இது கடந்த வருடங்களில்லும் பார்க்க 18% அதிகமானதாகும்.
 

நீங்களும் உங்கள் வணிக நடவடிக்கைகளில் Cloud இணைப் பயன் படுத்துவதன் மூலம் நன்மைகளைப் பெற்றிடுங்கள். இது தொடர்பான சேவைகளை Efutures, Sense Feel IT, GEOID IT Solutions போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. மேலும் இது பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை  Comment Box இல் பதிவிடுங்கள்.

 

Leave your comment
Comment
Name
Email