சினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram.

சினிமா அறிமுகமாகி 100 ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. அதன் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையான வளர்ச்சி மற்றும் புதிய கருவிகளின் மகத்துவமான படைப்பு என்பன சினிமாவை எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும்  புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கதைக்களங்கள் நம்மை நினைத்து பார்க்க முடியாத இடத்துக்கு அழைத்து செல்கின்றது என்றால் மிகையாகாது. திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் VFX Effect நாம் அறிந்ததே. திரைப்பட காட்சிகளில் வரும் பின்னணிகளை நிஜமாக இருப்பது போல்  VFX Effect மூலம் காட்ட முடிகிறது. இது சினிமாவின் வளர்ச்சியின் ஒரு முக்கிய சான்று. ஆரம்ப காலங்களில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களாக நடிப்பு மட்டுமே காட்டப்பட்டன. இதற்கு சிறந்த உதாரணமாக சார்லி சாப்ளினின் ஆரம்ப திரைப்படங்களை கூறலாம். அதன் பின்னர் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் மொழிகளுடன் உருவாகின. அதன் பின்னர் கலர் திரைப்படங்கள் தற்போது 3-D இலிருந்து 12-D வரையான திரைப்படங்கள் உருவாகிய வண்ணம் உள்ளன.


Charlie-Chaplin


3D திரைப்படங்கள் வரையே நம்மில் பலர் பார்த்ததுண்டு. இதன் தொழில்நுட்பமே நம்மை ஆச்சரிய கடலில் மூழ்கடிக்கிறது. எனவே 7D Hologram நம்மால் நினைத்து பார்க்க முடியாத தொழில்நுட்பமாக அல்லவா இருக்க வேண்டும். Hologram என்றால் என்ன? புதிதாக இருக்கின்றதே என ஜோசிக்கிறீர்களா? இது புதிதல்ல. Hologram ஐ நாம் திரைப்பட காட்சிகளில் கண்டதுண்டு. ஒளிக்கற்றைகளை (rays) பயன்படுத்தி உருவங்கள் நிஜத்தில் உள்ளது போல் காண்பிக்கும் தொழில்நுட்பமே Hologram.


Hologram


3-D Hologram என்பது நீள ,உயர, அகலங்களில் மூன்று பரிமாணங்களை கொண்டிருக்கும். நம் சாதாரண கண்களினால் இவற்றை பார்க்க முடியும் இருப்பினும் 7-D Hologram இன் சிறப்பு என்ன என்று தெரியுமா? 7-D Hologram இல் பல நிலைகளில் இருந்து உருவங்களையோ நிகழ்வுகளையோ சுற்றி படம் பிடிக்கப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு நிலையிலும் முப்பரிமாண நிகழ்வுகள் இருபரிமாண கோணங்களில் படம் பிடிக்கப்படுகின்றது. ஒவ்வொரு புகைப்பட கருவிகளும் ஒளிப் பண்புகளையும் (light properties) நேரத்தையும் (time) பதிவு செய்கின்றன.


Film


3-D position+ 2-D angle + light + time +light properties = 7D.

7-D திரைப்படங்களை பார்க்கும் போது அத் திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரமாக நம்மை நினைக்க தோன்றும். திரைப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் நமக்கு முன்னால் , அருகில் நடப்பது போன்று இருக்கும். அதனுடன் நாமும் அசைவது போன்று இருக்கும். உதாரணமாக உயரமான கட்டிடத்தில் இருந்து பாய்வது போல் ஒரு காட்சி அமைந்தால் பார்ப்பவர்களுக்கு தாம் கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்று தோன்றும். அத்துடன் படத்தில் வரும் உருவங்கள், கதாபாத்திரங்கள் நம்மால் தொட்டுணர முடியும் அனால் மாற்றங்கள் செய்ய இயலாது. 7-D திரைப்படங்களை பார்ப்பதற்கு விசேட முறையில் ஆசனங்கள் மற்றும் திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் திரையரங்குகள் உலகின் சில இடங்களிலேயே தற்போது உள்ளன.


7D-Chairs


இத் திரைப்படங்களை பார்வையிட விசேட முறையில் வடிவமைக்கப்பட்ட திரை அரங்குகள் இருப்பது போல 7-D என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட projection system, sound system, 6 Dof dynamic seat system, திரைப்பட காட்சிகளை உண்மையாக மாற்றுவதற்கு விசேட சூழல் அமைப்புகள் போன்றன உள்ளன. இவ் அனைத்து அம்சங்களும் கணனியின் கட்டுபாட்டிலேயே செயற்படுகின்றன.

7-D திரைப்படங்களில் நாம் மற்றைய திரைப்படங்களை விட அனுபவிக்கமுடியாத சிறப்பம்சங்கள் 12 உள்ளன. இச் சிறப்பம்சங்கள் திரைப்பட காட்சிக்கு அமைய எம்மால் உணர முடியும். காற்று , மழை, ஒளி ,நெருப்பு, bubble, back push, vibration, leg sweep, fog என்பன அவற்றுள் சில.


7D-Gun


திரைப்படங்கள் பொதுவாக 3-D, 4-D, 5-D, 8-D, 9-D, 10-D, 11-D, 12-D என்ற பரிமாணங்களில் எடுக்கப்படுகின்றன. இதில் 7-Dஐ போல தனித்துவமான தொழில்நுட்பங்களுடன் கூடியது 9-D தொழில்நுட்பமே. 8-D ,10-D ,11D ,12-D என்பவற்றில் இவற்றில்  பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலங்களில் எம்மாலும் 7D அற்புதங்களை காண முடியும்.

இன்று சினிமா இன்றியமையாத ஒரு பொழுதுபோக்காக இருப்பதனால் அனைவருக்கும் அதை பற்றி அறிய வேண்டும் என ஆவல் ஏற்படுகின்றது. இத் தகவல்கள் உங்கள் 7-D பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தி விட்டதா? மேலும் இது பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கீழுள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்.

Leave your comment
Comment
Name
Email