சுற்றுலா பயணிகள் அறியாத ஹோட்டல் ரகசியங்கள்..

வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால் ஹோட்டல்கள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன.எண்ணற்ற வசதிகளுக்காகவும் கனிவான சேவைகளுக்காகவும் சுற்றுலா பயணிகளை ஹோட்டல்கள் பெரிதும் கவர்ந்து இழுக்கின்றன.ஆனாலும் ஹோட்டல்களை பற்றிய ஒரு சில விஷயங்கள் கவலை அளிக்க கூடியதாகவும் உள்ளன.எனவே அவை பற்றிய சில விஷயங்களை அறிந்து வைத்து கொள்வதால் ஒரு சில தர்மசங்கடங்களில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இப்பொழுது நாம் ஹோட்டல்களை பற்றி பலரும் அறியாத சில விடயங்களை பாப்போம்.

தங்குமிடங்கள்

hotel, Inn, motel, guest house, resort ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பலரும் அறிந்திருப்பதில்லை. உணவிற்காகவும் தங்குவதற்காகவும் அணுகப்படும் இவை ஏன் வெவ்வேறு வார்த்தைகளில் அழைக்கப்படுகின்றன?

1. ஹோட்டல்

ஹோட்டல் என்பது நகர்ப்புறங்களில் கட்டமைக்கப்பட்ட பல அடுக்குமாடிகளையும் நூற்றுக்கணக்கான அறைகளையும் கொண்ட ஓர் கட்டமைப்பாகும். குறுகிய கால கட்டண அடிப்படையில் அறைகள் மற்றும் சேவைகளை ஹோட்டல்கள் வழங்குகின்றன. இவற்றின் நட்ச்சத்திர மதிப்பீடானது பகட்டான பரந்த அறைகள், 24 மணிநேர கனிவான சேவைகள், பரந்த வாகன நிறுத்துமிட வசதி,பிற ஆடம்பர வசதிகள் என்பவற்றின் அடிப்படையில்  தீர்மானிக்கப்படுகின்றது.


ஹோட்டல்கள்


2. Inn

Inn என்று அழைக்கப்படுபவை உணவிற்காகவும் உறைவிடத்திற்காகவும் நெடுஞ்சாலைகளின் அருகே அமைந்திருப்பவை ஆகும். ஒப்பீட்டளவில் ஹோட்டல்களை விடவும் இவை சிறியதாக காணப்படும். ஆடம்பர வசதிகள் இன்றி அடிப்படை வசதிகளை மட்டுமே இவை கொண்டிருக்கும்.


Inn


3. Motel

Motel என்பது வாகன ஓட்டிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இது பெரும்பாலும் நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும். வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்துவதற்காக பரந்த வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டிருக்கும்.


Motel


4. Guest house

Guest house என்பது ஒரு விருந்தினர் இல்லம் என அனைவருக்கும் தெரியும். மிகவும் எளிய கட்டமைப்பையும் சாதாரண அடிப்படை வசதிகளையும் மட்டுமே இது கொண்டிருக்கும். இவை நாள் மற்றும் மாத வாடகை அடிப்படையிலும் வாடகைக்கு விடப்படுகின்றன.


Guesthouse


5. Resort

Resort என்பது கடற்கரை, நதி, வனவிலங்கு பூங்கா , பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றின் அருகில் அமைந்திருக்கும். ஓய்வு எடுத்துக்கொள்ளும் பொருட்டு வருபவர்களுக்கு வசதியாக இவற்றுக்கு அருகில் பரந்த திறந்தவெளி இடங்கள் இருக்கும். விருந்தினர்கள் விரும்பும் காலம் வரை இங்கு தங்கி கொள்ள முடியும்.


Resort


வண்ண கொடி

சில ஸ்டார் ஹோட்டல்களில் முகப்பு நுழைவாயில் பகுதியில் பல வண்ண கொடிகளோ அல்லது பிற நாட்டு தேசிய கொடிகளோ ஏற்றப்பட்டு இருப்பதை நீங்கள் பாத்திருப்பீர்கள் இதற்கு என்ன காரணம்?

வண்ண கொடிகளானது ஹோட்டலின் அழகிற்காக மட்டுமே பறக்க விடப்படுகின்றன. இவை மெல்லிய நைலோன் துணியால் ஆனவை என்பதால் குறைந்த காற்று வீசினாலும் நன்றாக பறக்கும். காற்றில் பறக்கும் வண்ண கொடிகளால் பொதுமக்களின் கவனம் கவரப்பட்டு ஹோட்டலின் பிரமாண்டத்தை உற்றுநோக்க வைக்கின்றது. சில ஹோட்டல்களில் சில குறிப்பிட நாடுகளின் தேசிய கொடிகள் பறந்து கொண்டிருக்கும். இதற்கு காரணம் அக் ஹோட்டலுக்கு அதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ அந்தந்த நாடுகளில் அந்த ஹோட்டலின் கிளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதனை அடையாளப்படுத்துகின்றது. மற்றும் தேசிய கோடிகளுக்கு சொந்தமான நாடுகளில் இருந்து அதிக வாடிக்கையாளர்களையும் கொண்டிருப்பதை குறிக்கின்றது.


Flags


அறைகள்  பராமரிப்பு

சில ஹோட்டல்களில் அறைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக அறையில் இருக்கும் படுக்கை விரிப்புகள் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதில்லை. ஒரு விருந்தினர் தங்கிவிட்டு சென்ற பின்னர் படுக்கை விரிப்பை மட்டும் ஒழுங்குபடுத்தி வைப்பார்கள் ஆனால் அதனை துவைப்பதில்லை இதனால் ஏற்கனவே தங்கிச்சென்ற விருந்தினரின் வியர்வை போன்ற திரவங்கள் படுக்கை விரிப்பில் பட்டு காய்ந்துபோய் இருக்கும். இதனால் உருவாகும் கிருமிகளால் அடுத்து வரும் விருந்தினருக்கு நோய் தொற்று உண்டாகக்கூடும். எனவே குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சென்று தங்குவோர் தங்களுக்கு முன் படுக்கைவிரிப்பை மாற்ற சொல்லவேண்டும்.


Hotel-Bed


ரகசிய கேமரா

அறையை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரகசிய கேமரா பற்றிய போதிய விழிப்புணர்வு இருப்பதனால் அறைக்கு வந்ததும் அறை மற்றும் குளியலறை போன்றவற்றை சோதனை செய்யும் பலர் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் பீக் ஹோல் ஐ மறந்து விடுவார்கள். இது அறைக்கு வெளியே உள்ளவர்களை உள்ளிருந்த படியே பார்க்க வசதியாக கதவில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் லென்ஸ் க்கு பதிலாக கேமெராவை பொருத்த முடியும்.எனவே அறைக்கு வந்ததும் முதல் கட்டமாக பீக் ஹோல் சரியாக செயற்படுகின்றது என்பதை சோதித்து கொள்ள வேண்டும். அதில் எதாவது சந்தேகப்படும் படி இருந்தால் வேறு அறையை மாற்றி தரும்படி கேளுங்கள்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தால் கீழுள்ள கருத்து பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Leave your comment
Comment
Name
Email