உங்கள் புகைப்படங்கள் சிறப்பாக அமைய ஆசையா?

நான் சிறந்த புகைப்பட கலைஞனோ அல்லது விலை உயர்ந்த புகைப்பட கருவிகளை கையாள்பவனோ அல்ல. ஆனாலும் என் புகைப்படங்கள் ஓரளவு அங்கீகாரம் பெறும் அளவிற்கு மதிக்கப்படுகின்றன. என் அனுபவத்தின் மூலம் அறிந்தது, Photography என்பது விலை உயர்ந்த கருவிகளில் மட்டும் தங்கியிருப்பதில்லை அது நுட்பத்திலும் பெருமளவு தங்கியுள்ளது. புகைப்படம் ஒன்றை எடுக்கும் முன் அதன்  அடிப்படை அம்சங்களை அறிதல் வேண்டும். அதன் பின்னர் ஒளி மற்றும் நிறம் சார்ந்த நுட்பங்கள் தெரிந்திருத்தல் நல்லது. மேலும் நமக்கேற்றாற் போல் காட்சியை வடிவமைத்தல் என தீவிரப்படுத்தலாம். இதனைப் பயிற்சி செய்ய சாதாரணமான நம் கைபேசியின் கமரா போதுமானது.


Camera-Basic-Tech

புகைப்படங்கள் எடுப்பதற்கான அடிப்படை நுட்பங்கள் (Photography Basics)

பலரிடம் தம்மிடமிருக்கும் கமரா அதி உச்சமாய் எத்தனை மெகா பிக்ஸல் (Mega Pixel) அளவில் புகைப்படங்களை எடுக்க வல்லது என்பதைக் கூட அறிந்திருப்பதில்லை. நாம் கையாளும் கமராவின் Flash On, Off இல் தொடங்கி கட்டுப்பாடுகள், வேறுபட்ட Modes வரை அதிலிருக்கும் அம்சங்களை மிகப் பொறுமையாக நேரம் எடுத்து அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கமராவின் கையேடுகள் மற்றும் Online விளக்க வீடியோக்கள் என்பவற்றை பார்ப்பது நம்மால் நம் கமராவைப் பயன்படுத்தி செய்யக்கூடிய வித்தியாசமான புகைப்படங்கள் பற்றிய அறிவையும் தரும்.

கமராவைக் கையாளும் முறையும் அதன் தரத்தில் தாக்கம் செலுத்துகிறத்து. உதாரணமாக DSLR கேமராவை இரு கைகளிலும் மிக அதிகமான கட்டுப்பாட்டில்  வைத்திருக்க வேண்டியது அவசியமானது. உங்கள் இடது கையில் லென்ஸையும் மற்றும் உங்கள் வலது கையில் கேமரா உடலையும் வைத்து பிடிப்பதுடன் முழங்கைகளை உடலுக்கு நெருக்கமாகவும் வைத்திருக்கும் போது இலகுவாக இருக்கும். சாதாரணமாக தொலைபேசி கமராவிலும்  கூட இரு கைகளையும் பயன்படுத்தும் போது கலங்கல் தன்மையான புகைப்படங்கள் எடுக்கப்படும் வீதம் குறைவடையும். புகைப்படங்களை பின்னர் மற்றிமைக்க (Edit) முடியமானதாக இருக்க வேண்டுமெனின் அதியுயர் தெளிவுத்திறனில் (Hi-Res) கமராவினை மாற்றியமைதிருத்தல் நல்லது.


Light-Settings-Mobile-Camera

ஒளி மற்றும் நிறம் சார்ந்த அம்சங்கள்

ஒளியானது புகைப்படம் ஒன்றின் அழகினை மொத்தமாய் மாற்றும் சக்தியுடையது. அது புகைப்படங்களின் அடிப்படை கூறு என்றே சொல்லலாம். புகைப்படம் எடுக்கும் முன் ஒளியானது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். நபரையோ அல்லது பொருளையோ புகைப்படம் எடுப்பதெனில் போதுமான ஒளி படும் வகையில் இருத்தல் நல்லது. ஒளிவரும் திசையைப் பொறுத்தே புகைப்படம் எடுப்பது தீர்மானிக்கப்படும். உதாரணமாக வெளியில்  புகைப்படம் எடுக்கும் போது சூரியன் எங்கே இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். பொன் ஒளி  நேரங்களாக கருதப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களின் நிறம் பலராலும் விரும்பப்படும் சரியான நிறங்களின் கலவையிலிருக்கும். இந் நேரம் அதிகளவில் நீடிக்காவிடினும் துல்லியமான புகைப்படங்கள் எடுக்கப்படும் போது சிறப்பானதாக அமையும்.

கட்டுப்படுத்த முடியாத அளவு ஒளி எனின் shade இன் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கலாம். அது ஒளியின் அளவை சமநிலைப்படுத்தவும் பழைய புகைப்படங்கள் போன்ற Vintage photography look ஐயும்  தரும். அதிக ஒளியியில் புகைப்படம் எடுக்கும் போது தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது தவறு, அவ்வாறான சந்தர்பங்களில் கூடுமானவரை நிழலில் புகைப்படம் எடுக்க வேண்டும்.   பலர் flash light ஐ இருளில் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்துகின்றனர். கூடிய ஒளியில் புகைப்படம் எடுக்கும் போதும் flash light ஐப் பயன் படுத்துவதன் மூலம் தேவையற்ற நிழலை நீக்க முடியும்.  அது நாம் எதிர்பார்க்கும் வகையில் சிறந்த புகைப்படங்களை தரலாம். கூடுமானவரை இயற்கை ஒளியில் புகைப்படம் எடுப்பதன் மூலம் சூழலின் நிறங்களை அப்படியே பதிவு செய்ய முடியுமானதாக இருக்கும்.


Ella-Srilanka-Photography

காட்சியின் கட்டமைப்பை வடிவமைத்தல்

பலர் புகைப்படம் எடுப்பதற்கு தம்மை வரிசை ஒழுங்கில் நின்று வடிவமைதுக் கொள்வது புகைப்படங்களில் இயல்புத்தன்மையை தருவதில்லை. இன்று பலரால் சாதாரண Candid Shots எனப்படும் எழுந்தவாரியான புகைப்படங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அது புகைப்படம் எடுப்பவரின் திறமையில் தங்கியுள்ளது. புகைப்படம் எடுக்க வேண்டியது பொருளோ அல்லது நபரோ கவனத்துடன் சரியான தருணத்துகாக காத்த்திருக்கும் பொறுமை அவசியம். சரியான தருணத்தில் எடுக்கப்படும் போது எதிர்பாராத அளவு மிகச் சிறந்த புகைப்படங்களைத் தரும். புகைப்படங்களில் layer எனப்படுவது பொருட்களிடையே உள்ள இடைவெளி மூலம் பரிமாணங்களை ஏற்படுத்துவதாகும். நாம் புகைப்படம் எடுக்க வேண்டிய பொருளின் முன்னாள் பொருளொன்றை வைப்பதன் மூலம் நாம் புகைப்படம் எடுக்க வேண்டிய பொருள் சிறிதாகவும் பின்னால் பரந்த பொருள் உதாரணமாக கட்டடம் போன்றவை  இருக்கும் போது நாம் புகைப்படம் எடுக்க வேண்டிய பொருள் சிறிதாகவும் இருக்கும்.

இவை சாதாரணமாக  புகைப்படம் எடுப்பதில் நம்மால் செய்யக் கூடிய சிறிய நுட்பங்களாகும். இவை அனைத்தையும் தாண்டி Photography எனும் கலையானது நம் ஆர்வம், சிறந்த கற்பனா சக்தியின் கலவையில்  மிகச் சிறந்த புகைப்படங்களாக வெளிப்படுகின்றன.

Leave your comment
Comment
Name
Email