தொழில்நுட்பத்தின் உச்சம் தொடும் நனோ.

நனோ என்னும் சொல்லை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அநேகமானோரின் பதில் Smart Phone களில் நனோ Sim பயன்படுத்துகின்றோம் என்பதாகும். நனோ Sim  என்றால் என்ன? அளவில் சிறிய sim card இல்லாவிட்டால் அளவில் சிறியது அல்லது 10-9 என்பார்கள். இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள கூடியவையே. நனோ தொழில்நுட்பம் என்பது மிக மிக சிறிய துணிக்கைகள் அணுக்களுடன் கூடிய வேலைப்பாடுகள் ஆகும். 5ம் கைத்தொழில் புரட்சி இத் தொழில்நுட்பத்தை வைத்தே செயற்படுகின்றது.


Nanotech

இன்றைய கால கட்டத்தில் எமது வாழ்வை  மாற்றியமைக்கும் வகையில் நனோ தொழில்நுட்பமானது பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நனோ  உற்பத்தி  பொருட்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் அது  தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்தப் பின்னணியில் நனோ தொழில்நுட்பமானது மருத்துவம் தொடக்கம் விண்வெளி என்றவாறாக பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. உயிரியல், மருத்துவம், பொறியியல், இயற்பியல், வேதியல், மின்னியல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, எரிசக்தி என்பன அவற்றில் சிலவாகும்.

Richard Finn என்பவரே நனோ தொழில்நுட்பத்தின் தந்தை. அணுகுண்டுகள் தயாரிப்பில் பயன்பட்டது இத் தொழில்நுட்பமே! அதனை ஏன் நல்ல நோக்கங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று அனைவரும் எண்ணினார்கள். இதன் விளைவாக இவ் தொழில்நுட்பம் பல்வேறு நல்ல துறைகளில் இப்போது பயன்பட்டு வருகின்றது. அணுக்களுக்குள்ளே மாற்றங்களை செய்வதன் மூலம் புதிய விடயங்களை கண்டுபிடிக்கலாம், மாற்றலாம் என உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?


Nano


தற்போதைய காலகட்டத்திலே நனோ தொழில்நுட்ப பயன்பாடு உலகளவில் 50% உள்ளது. நனோ தொழில்நுட்பம் சார்பான கற்கை நெறிகளும் பல உள்ளன. ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு நனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது பற்றியே கற்பிக்கப்படுகின்றது. இத் தொழில்நுட்பத்தில் பொருட்களை உருவாக்கும் போது அவற்றின் பணித்திறன் கூடும். அத்துடன்  இணைக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம் அதன் செயற்றிறனையும் துரிதத்தையும் அதிகரிக்க முடியும்.

நனோ தொழில்நுட்பம் இயற்கையில் இருந்தே கொண்டு வரப்பட்டது. தாமரை இலையில் தண்ணீரோ அழுக்கு பொருட்களோ தங்குவதில்லை. இதை ஆராய்ந்த போது நனோ முறையில் இதன் இலைகள் உருவானதே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.


Lotus-Leaf


நனோவின் பயன்கள்

1. நனோ தொழில்நுட்பத்தில் ஆடைகள் உருவாக்கப்படுவதனால் துணிகளில் அழுக்குகளோ தூசு துணிக்கைகளோ படிவதில்லை. இதனால் ஆடைகளை துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. வர்ணங்கள் நனோ தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படுவதனால் எல்லா மேற்பரப்புகளிலும் சீராக பரவி தூசு துணிக்கைகள் படியாமல் என்றும் புதிது போன்றே தோற்றமளிக்கும். ஏன் இப்படி என்று யோசிக்க தோன்றுகின்றது அல்லவா? ஏனென்றால் நனோ அளவை விட பெரிய கூறுகள் இதன் மேல் தங்குவதில்லை.


Nano-Dress


2. வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களில் நனோவின் உபயோகம் வியக்க வைக்கும் அளவில் உள்ளது. வாகன எரிபொருள் தாங்கியில் Hytrojen Consule என்னும் பொருள் தயாரிக்கப்படும். இது Hytrogen Oxide உடன் எதிர் விளைவை ஏற்படுத்தி கூடுதலான சக்தியை பெற்று தருவதுடன் தண்ணீர் சுற்றாடலுக்கு வெளியிடப்படும். இதனால் வாயுக்களால் ஏற்படும் சூழல் மாசடைவு இல்லாமல் போகின்றது.


Spare-Parts


3. மருத்துவ துறையில் புதிய புதிய உபகரணங்கள் தொழில்நுட்பங்கள் வந்தாலும் நனோக்கு என தனி இடம் உண்டு. சத்திரசிகிச்சை உபகரணங்கள், ஊசிகள் இதன் மூலம் உருவாக்கப்படுவதால் துல்லியமாக சத்திரசிகிச்சை செய்யவும், உபகரணங்கள் துருப்பிடிக்கால் இருக்கவும் உதவுகின்றது. நனோ Tablets பல நோய்களை குணப்படுத்துவதுடன் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. புற்றுநோயை குணப்படுத்தவும் எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதை தடுப்பதற்கும் கண்டுபிடிப்புக்கள் நடந்த வண்ணம் உள்ளன.


Nano-Tablets


4. Carbon நனோ குழாய்கள் உருக்கு கம்பியினால் உருவாக்கப்பட குழாய்களை விட 20 மடங்கு வலிமையானதாகவும் அலுமினியத்தை விட 1/2 பங்கு நிறையும் வைரத்தை விட அதன் பிரகாசம் இரு மடங்கு அதிகமாகவும் உள்ளது. இக் குழாய்களை விண்வெளியில் உள்ள ஆய்வு கூடங்களுடனும் சீகிரிய மலைத்தொடரில்  அமைக்கப்படவுள்ள விண்வெளி ஆய்வு கூடத்துடன் இணைத்து அக் குழாயில் ஒரு பாரம் தூக்கினை இணைத்து எதிர்காலத்தில் மக்களை விண்வெளிக்கு உல்லாசப் பிரயாணிகளாக அழைத்து செல்ல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றது.


Carbon-Nano


தொழில்நுட்பங்கள் இன்றி இன்றைய உலகில் மனித சமூதாயத்தின் எந்தவொரு நகர்வும் சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மை அதிகரிப்பதால் மனித சமூதாயம் நன்மையையும் தீமையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. பொருளாதார ரீதியாக இத்தொழில்நுட்பம் முக்கியம் பெறுவதனால் இதனை மனித வாழ்வில் இருந்து நீக்கிவிட முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே இத்தகைய தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்குப் பல்வேறு வழிகளில் உதவினாலும் கூட, அதனால் ஏற்படும் விளைவுகளை மனித சமுதாயமே அனுபவிக்க வேண்டும்.எனது இந்த பதிவு நனோ தொழில்நுட்பம் பற்றிய உங்கள் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்றப்படுத்தியுள்ளதா? அப்படியாயின் கீழுள்ள கருத்துப்பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Leave your comment
Comment
Name
Email