சிறந்த மடிக்கணனி ஒன்றை தெரிவு செய்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் மேசை கணனி (Desktop Computer) இலும் பார்க்க மடிக்கணணிகளின் (Laptop) தேவை அதிகரித்துள்ளது எனலாம். இலகுவாவாக நமக்கே உரித்தான விடயங்களை கொண்டுசெல்ல கூடியதாக இருப்பதே இதன் முக்கியமான சிறப்பசமாகும். மாணவர்கள் மத்தியில் மடிக்கணணிகளின் வரவேற்ப்பு மிக அதிகம் ஏனெனில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வெளி இடங்களில் கல்வி கற்பதனால் தமக்கான கணனியை தம்முடனே வைதுருக வேண்டிய தேவையாலகும். இருந்தும் பலர் தமக்கு பொருத்தமான சிறந்த மடிக்கனனியைத் தேர்வு செய்வதில்லை, அதனை தீர்க்க சில வழிகள்.

ஏன் மடிக்க்கணணி தேவை என தீர்மானியுங்கள்.

  • மடிக்கனனியின் நன்மைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். மடிக்கணணியை எங்கும் எடுத்து செல்லவும் எங்கிருந்தும் வேலை செய்யவும் இலகுவானது.
  • எதிர்மறையான விடயங்களாக பிரயாணத்தின் போது மடிக்கணணி மீது அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அதன் மின் வசதியானது நினைக்கும் அளவிற்கு நீண்டதாக இல்லது போகலாம். அதையும் தாண்டி இதனை மேசை கணணி போல மேம்படுத்த முடியாது பதிலாக புதிதாக ஒன்று வாங்க வேண்டியதாக இருக்கும். எனவே இவற்றை கருதுவது நல்லது.
Laptop-Using-In-Travel
  • உங்கள் தேவையானது சாதாரணமாக மின்னஞ்சல் படிப்பது, இசை கேட்பது அல்லது புதிதாய் வெளியிடப்பட்ட கணனி விளையாட்டு ஒன்றினை விளையாடுவது என்றால் அதற்கான கணனியின் தகமைகள் வேறுபடும்.
  • கணனிக்காக செலவு செய்யும் பண எல்லை எவ்வளவு என்பதை தீர்மானிக்கவும். அதர்க்கக பணத்தை ஒரேயடியாக செலவு செய்வதில் சிக்கல் இருப்பவர்கள் தவணை முறையில் பணம் செலுத்துவது போன்ற திட்டங்களை நாடலாம்.

இயங்குமுறைமையை (Opperating System) தீர்மானித்தல்.

  • விண்டோஸ் (Windows) – பெரும்பாலான கனனிகளில் பயன்படுத்தப்படும் இயங்குமுறை இது எனலாம். பெரும்பாலான கனனிகிகளில் பயன்படுவதால் இது பயன்படுத்துபவர்களுக்கு கூடிய இணக்கத்தன்மையைத் தருகிறது எனலாம். மற்றைய இயக்க முறைகளை விட கூடியளவான கணணி விளையாட்டுக்களுக்கு இது ஆதரவளிப்பதியும் காணலாம்.
Windows-Os
  • லினக்ஸ் (Linux) – இது முற்றிலும் இலவசமான திறந்த மென் பொருள் எனலாம். மேலும் இதனை live CD மூலம் தற்போதைய கணனியில் முறச்சி செய்து பார்க்கலாம். மேலும் கிட்டத்தட்ட  வைரஸ் அச்சுறுத்தல்கள் அற்ற இயங்கு முறைமை என்றும் சொல்லலாம். இருந்தும் இதன் பயனர் இடைமுகம் (User Interface) பலருக்கு சிரமத்தை எற்ப்படுத்துகிறது.
  • மேக் (Mac OS) – இது விண்டோஸ் இலும் பார்க்க குறைந்த வைரஸ் தாக்கத்தை கொண்டது. இது மிகவும் இலகுவான பயனர் இடைமுகத்தைக் கொண்டது. அத்துடன் ஏனைய ஆப்பிள் தயரிப்புகளுடன் ஒத்தியங்குவதர்கான அமைப்பையும் கொண்டது. இருந்து பொதுவாக விண்டோஸ் இலும் பார்க்க உயர்ந்த விளையுடையதாக இருக்கும்.
Mac-Os

மடிக்கனனியின் வடிவமைப்பைக் கருதுக.

  • கணனியின் அளவு – கணனியின் அளவு என்பது அதன் எடை , திரையின் அளவு, என்பவற்றைக் உள்ளடக்கியது. கொண்டு செல்லவதை முக்கிய தேவையாக கொண்டவர்கள் எடை குறைந்த நெட்புக்குகளை (Net book) தெரிவு செய்யலாம். மாறாக பொழுதுபோக்கு அம்சங்களுகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பெரிய திரை நீண்ட பேட்டரி ஆயுள் என்பன கவனிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.
  • கணனியின் வெளிப்புறத்தோற்றம் – வெளிப்புற அமைப்பானது உலோகத்திலா அல்லது பிளாஸ்டிக் வெளிப்புறமாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள். நன்கு தயாரிக்கப்பட்ட உலோக வெளிப்புறத்தால் ஆன மடிக்கணினிகள் பிளாஸ்டிக் ஒன்றைக் காட்டிலும் கனமானதாக இல்லை. எனவே வடிவமைப்பை மட்டும் கருத்தில் கொண்டு தெரிவு செய்யலாம். மேலும் அதிகளவில் பயணங்களில் பயன்படுத்தப்படுவதானால் தண்ணீர் மற்றும் அழுக்குக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் பெற முடியும்.
Laptop-Sizes

கணனியின் குனாம்சங்களைக் கவனிக்க.

மடிக்கனணியின் உள்ளடக்கங்களை கருத்தில் கொள்க. ஒவ்வொரு மடிக்கணணியும் அதன் உற்பத்தி நிருவனகளுக்கேற்ப மாறுபட்ட உள்ளடக்கங்களுடன் சந்தையில் கிடைக்கிறது.

  • மத்திய செயலாக்க அலகு (CPU)  – தொழிநுட்ப வளர்ச்சியால் வேகமானது 4 ஆண்டுகளில் இரட்டிப்படைகிறது. எனவே இன்றைய கால கட்டத்தின் புத்துய வரவான CPU களில் கவனம் செலுத்தவும்.
  • நினைவகம் (RAM) – பொதுவாக 4GB அளவான RAM ஐ கொண்டதாக மடிக்கனனிகள் இருக்கும். இது பொதுவாகப் போதுமானது. இருந்தும் மேம்படுதக்க் கூடிய வசதிகளை கொண்டதா என சரி பார்த்துக் கொள்வது நீண்ட கால பாவனையில் பயனுள்ளதாய் அமையும்.
  • கிராபிக்ஸ் (Graphics) – அதிகளவில் கணணி விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்கள் graphics card இல் தனித்துவமானதாக இருக்குமாறு தெரிவு செய்ய வேண்டும். அதில் அவசியம் இல்லாதவர்கள் சாதாரணமாக கொள்வனவு செய்வது போதுமானதாக இருக்கும்.
Laptop-Configuration
  • சேமிப்பிடம் (Storage Capacity) – பெரும்பாலும் 1 TB அளவான (Hard Disk) சேமிப்பிடத்துடன் இன்றைய மடிக்கனனிகள் வடிவமைக்கப்படுகின்றான. குறைவான சேமிப்பிடதுடன் கொள்வனவு செய்யும் போது இசை, புகைப்படம் மற்றும் வீடியோ நூலகங்கள் போன்றவற்றிற்கு வெளிப்புற வன்வட்டுக்களை (External Hard Disk) வாங்க வேண்டி ஏற்படும்.
  • Optical Drive வசதிகள் – CD மற்றும் DVD என்பவற்றை புதிதாக write செய்ய விரும்புபவர்கள் அதற்கான வசதி உள்ளதா என சரி பார்த்து தெரிவு செய்ய வேண்டும். புதிய தொழினுட்பமாக Blu-Ray Drive ஐ பலரும் விரும்புகின்றனர்.

பொருத்தமான தேர்வுகளை செய்வதன் மூலம் மன நிறைவுடன் மடிக்கனணிகளை கொள்வனவு செய்யமுடியும். இலையேல் தமது மடிகணணியை திட்டி தீர்ப்பவர்களின் பட்டியலில் நீங்களும் ஒருவராகலாம்.

Leave your comment
Comment
Name
Email